உலகம்

காஸா மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு, வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் பலி

காஸா மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போரானது, பலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை என நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவைக் கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், உடனடியாகப் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டு, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் காஸாவினுள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மற்றும் வடக்கு காஸாவில் நேற்று (27) இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், நுசைராத் அகதிகள் முகாமில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் கொல்லப்பட்டதாக, அங்கு செயல்படும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அரசுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

இதையடுத்து, ஐ.நா.வின் பொதுச்சபைக் கூடத்தில், நேற்று முன்தினம் (26) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையைத் தொடங்கியதுடன் சுமார் 50-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் வெளிநடப்பு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டுக்கு விஜயம்

editor

மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கிய வடகொரியா

326 பேருடன் துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு – விமான நிலையத்தில் பரபரப்பு

editor