உள்நாடுபிராந்தியம்

கால்வாயில் இருந்து பெருந்தொகையான தோட்டாக்கள் மீட்பு

கெடலாவ கால்வாயின் படுகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கலன்பிந்துனுவெவ பொலிஸார் பெருந்தொகையான தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

5,038 T56 தோட்டாக்கள் கால்வாய்ப் படுகையில் புதைக்கப்பட்ட நிலையில், நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்வற்றியதால் அவை வெளியே தெரிந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

அப்பகுதியில் மேலும் வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிய மேலும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் கால்வாயில் வெடிபொருட்களைக் கொட்டியதற்குக் காரணமானவர்களை புலனாய்வாளர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை

Related posts

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

பொலிஸ் தலைமையகத்தினால் விசேட அறிவித்தல்

தப்பியோடிய சிறைக்கைதிகளை கைது செய்ய விசேட தேடுதல்