உள்நாடு

காலிமுகத்திட ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்தனர்

(UTV | கொழும்பு) – காலிமுகத்திட மக்கள் போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (18) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த வாரத்தில் இந்நாட்டின் அடுத்த ஜனாதிபதியை நியமிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் போராட்டத்தின் பிரஜைகள் குழுக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள், எந்த அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டாலும் போராட்டத்தின் செயல்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Related posts

சம்மாந்துறையில், பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு!

கொவிட் -19 தடுப்பூசி : 67,615 பேருக்கு சைனோபாம் செலுத்தப்பட்டுள்ளது

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 10 மாத குழந்தை உட்பட இருவருக்கு கொரோனா