வகைப்படுத்தப்படாத

காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக்கூட்டத்தில் இருவர் பலி!

(UDHAYAM, COLOMBO) – காலி முகத்திடலில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அதிக வெப்பம் காரணமாக அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 மற்றும் 62 வயதுகளை உடையவர்கயே இவ்வாறு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் சிகிச்சைபெற்று வருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Related posts

இராணுவ வீரர் அபிநந்தன் இந்தியாவை வந்தடைந்தார்

ஆயிரம் ரூபாய்க்கு ஐ போன்!

Lanka IOC revises fuel prices