அரசியல்உள்நாடு

காலி மாநகர சபையில் பெரும் பதற்ற நிலைமை – மேயர் வெளியேறினார்

காலி மாநகர சபையில் இன்று (30) நடைபெற்ற விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாநகர மேயர் சபையைத் தொடங்கியவுடன், சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையினால் சபையில் அமைதியற்ற சூழல் உருவானது.

இதன்போது, “திருடன் திருடன், எமது வாக்குகளைக் கொள்ளையடித்தான்” என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கோஷமிட்டனர்.

மேயர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபையின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றார்.

எனினும், அதன் பின்னர் குழுநிலை அமர்வு அறிவிக்கப்பட்டவுடன், கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து, சபையை அரை மணி நேரத்திற்கு ஒத்திவைத்த மேயர் சபையிலிருந்து வெளியேறினார்.

Related posts

இந்தியா உயர்ஸ்தானிகரால், 300 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப்பரிசில்கள்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல விவாதம் பிற்போடப்பட்டது

சீமெந்தின் விலையும் அதிகரிப்பு