காலி கோட்டையில் ஒல்லாந்தர் வைத்தியசாலை கட்டிடத்தின் பின்னால் உள்ள பாறையிலிருந்து கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு இளம் ஜோடியை சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள் குழு மீட்டுள்ளனர்.
நேற்று (22) மாலை நடந்த விபத்தை அருகிலுள்ள ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
ஒல்லாந்தர் கட்டிடத்தின் பின்னால் உள்ள பாறைக்கு காதல் ஜோடி சென்றிருந்த நிலையில், கடல் அலை திடீரென உயர்ந்ததால் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அந்த நேரத்தில், ஒல்லாந்தர் கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரி காமினி சம்பவத்தைக் கண்டு உடனடியாக கடலில் குதித்தித்துள்ளார்.
பின்னர், அருகிலுள்ள சுற்றுலா உணவகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று வந்து, போராடி காதல் ஜோடியை மீட்டு காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
விபத்தில் சிக்கிய இளம் பெண்ணும் இளைஞனும் அஹங்கம மற்றும் லனுமோதரவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இளம் பெண் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அதே நேரத்தில், இளைஞன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.