உள்நாடு

காலி கோட்டையின் பழைய கோட்டை நுழைவாயில்களுக்கு தற்காலிக பூட்டு

காலி கோட்டைக்கான பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

உலக பாரம்பரிய காலி கோட்டையின் பழைய கோட்டை வாயில்களுக்கு அருகிலுள்ள தொல்பொருள் நினைவுச்சின்ன சுற்றுச்சுவரில் ஒரு பாதுகாப்பு பணி காரணமாக மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வாயில்களைச் சூழவுள்ள பகுதியில் இரசாயன பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண தொல்பொருள் பணிப்பாளர் வசந்தி அழககோன் தெரிவித்துள்ளார்.

நாளை தொடக்கம் 31ஆம் திகதி வரை காலி கோட்டைக்குள் நுழைவதும் வெளியேறுவதும் புதிய கோட்டை வாயில்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து இன மக்களும் ஒன்றாக செயற்பட்டால் இலங்கையை உலகில் மிளிர வைக்க முடியும் – சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன

editor

புதிய வைரஸ் பரவல் – சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களின் விபரங்கள் சேகரிப்பு

editor

சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்

editor