உள்நாடுவிசேட செய்திகள்

காலாவதியான பொருட்கள் குறித்து பரவும் தகவல்கள் பொய்யானது – பாகிஸ்தான்

இலங்கைக்கு காலாவதியான பொருட்கள் வழங்கியதாக பரவும் செய்தியை பாகிஸ்தான் கடற்படை மறுத்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் இருந்தன என சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொய்யானது என பாகிஸ்தான் கடற்படை அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது.

இவ்வாறு சமூக ஊடகங்களி்ல் பரப்பிய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாகிஸ்தான் கடற்படை,

பேரிடர் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்த பைகள், உணவுப் பொருட்களுக்கானவை அல்ல, அவை ஏற்கனவே பாகிஸ்தான் கடற்படை பயிற்சி கப்பலில் இருந்த பழைய பைகள், இலங்கைக்கு அவசரமாக உதவி அனுப்ப வேண்டியிருந்ததால், அந்த பைகள் விரைவாக கொண்டுசெல்லும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

பைகளுக்குள் இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் புதியதும், காலாவதி நிறைவடையாதவையும் ஆகும்.

“இலங்கை மக்களுக்கு உதவுவதில் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்.

பொய்யான தகவல்கள் மற்றும் பிரசாரங்களுக்கு எவரும் உள்ளாக வேண்டாம்.”

டித்வா புயல் காரணமாக இலங்கையில் மிகப்பெரிய நிவாரண தேவை நிலவுகின்ற நிலையில், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் மீட்பு முயற்சியை திசைதிருப்பக் கூடாது.

Related posts

சட்டவிரோத மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக போராட்டம்

பாகிஸ்தான் கைதிகள் 43பேர் மீளவும் அந்நாட்டுக்கு

மழையுடனான வானிலை – எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவிப்பு

editor