வகைப்படுத்தப்படாத

காலநிலையில் திடீர் மாற்றம்..!

(UTV|COLOMBO)-நாட்டின் தென் மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் கடும் காற்று வீசும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் மணிக்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் காற்று வீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக நாட்டின் தென் பகுதியில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 786 பேர் மீது வழக்கு

Navy arrests 3 persons with ammunition

அரச முகாமை உதவியாளர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் முடிவுகள் வெளியீடு