வகைப்படுத்தப்படாத

காலத்தின் தேவையை உணர்ந்து சித்திர போட்டியை நடத்தியமை பாராட்டுக்குறியது திலகர் எம்.பி

(UDHAYAM, COLOMBO) – பாடசாலை பாடவிதான செயற்பாடுகளுக்கு அப்பால் இனைப்பாடவிதான செயற்பாடுகளை கல்வி க ற்பித்தலுக்கு மாறாக மாற்றுத்திட்ட விடங்களை பாடசாலை மட்டத்தில் முழுமையாக செய்யமுடியாது தனியான அமைப்பாக இருந்தும் மாணவர்களிடத்தில் சித்திர போட்டியை நடத்தியமை பாராட்டுக்குறியது என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகணம் திலகராஜ் தெரிவித்தார்

ஜீவ ஊற்று ஆங்கிளம் அகடமியின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை மாணவர்களிடத்தில் நடைபெற்ற சித்திர போட்டியில்  வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கும் நிகழ்வில்   கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

கல்வி இராஜங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் உட்பட பாடசாலை அதிபர் ஆசிரியர் பெறற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் மாணவர்களின் திறமையை கல்வியினூடாக மற்றும் கனிப்பிட முடியாது மாறாக அவர்களிடத்திலுள்ள . சித்திரம். இசை.நடனம் போ ன்ற கலையார்வங்களையும் கருத்தில்  கொள்ள  வேண்டும்

தற்போது நவீன தொழில் நுற்பத்தினால் மனித செயற்பாடுகள் மந்தபோக்கில் செல்கின்றது  கடந்த காலங்கைளில் இவ்வாறான மேடை நிகழ்வுகளின் போது சிறந்த ஓவியனை தேடி பெனர்கள் எழுதும்  காலம் இருந்தது தற்போது டிஜிட்டல் முறையில் மாற்றம் கண்டு விட்டதால் ஓவியனுக்கு களம் இல்லாமல் போனது

இன்றை காலாத்தில் சிறார்களிடத்தில் ஓவிய போட்டியை நடத்தியமை பாராட்டுக்குறியது அது போலவே இவ் அமைப்பு கடந்த வருடம் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது  அதிலும் பங்குபற்றும் வாய்ப்பு எனக்கு  கிட்டியது இது போல சமூகத்தின் இன்றை தேவையை அறிந்து நிகழ்ச்சிகளை நடத்து இந்த அமைப்புக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துகொண்டு எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளாக வளர சிறார்களுக்கும் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திர

Related posts

நியூஸிலாந்து தாக்குதல்தாரி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு!!

Sri Lankan arrested for using Filipina wife as cybersex slave

கால நிலை