சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு

(UTV|COLOMBO)-அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்கரைக்கு அப்பால் ஆழமான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் இதற்கு காரணமாகும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

எனவே, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அப்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

 

 

 

Related posts

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய டயானா கமகே – வழக்குத் தாக்கல்

நாட்டு மக்களுக்கான பிரதமரின் விசேட உரை…

இலங்கையில் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இராணுவத்தினர்…