விளையாட்டு

காயம் அடைந்த ஸ்டீவ் ஸ்மித் போட்டியிலிருந்து விலகல்

(UTV | சிட்னி) – இலங்கைக்கு எதிரான நேற்றைய இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் காயமடைந்த ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

சிக்ஸரைத் தவிர்க்க முயன்ற அவரது தலை தரையில் மோதியது.

ஸ்டீவ் ஸ்மித் தற்போது சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் முழுமையாக குணமடைய இன்னும் 06 அல்லது 07 நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்று வீரரை அறிவிக்கப்போவதில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 03 ஆவது இருபதுக்கு இருபது போட்டி நாளை கன்பராவில் நடைபெறவுள்ளது.

Related posts

சாமரி அதபத்து தொடக்க பெண்கள் CPL போட்டிக்கு

இலங்கை அணியின் மூவர் உள்ளடங்கிய தர்மசேனவின் கனவு அணி

Novak Djokovic கொரோனாவில் இருந்து பூரண குணம்