வகைப்படுத்தப்படாத

காம்சாத்கா தீவில் நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவு

(UTV|RUSSIA)-ரஷிய நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள காம்சாத்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

காம்சாத்கா விரிகுடா பகுதியில் 76.2 கி.மீ. ஆழத்தில் அந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நில நடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கின. வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீதிகளில் வந்து தஞ்சம் அடைந்தனர்.

காம்சாத்கா தீபகற்பத்தில் பல இடங்களில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

மேலும் இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என ரஷிய நெருக்கடி கால சூழல்கள் அமைச்சக வட்டாரங்கள் கூறின.

 

 

 

Related posts

වැසි රහිත කාලගුණය තවදුරටත්

Premier says he is opposed to capital punishment

தொடர்ந்து அச்சுறுத்தும் காலநிலை!