உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை (31) நண்பகல் வர்த்தக நிலையத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

அங்கிருந்த பொருட்கள் பொலிஸார் மற்றும் பொது மக்களால் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பொய்யான செய்தி பற்றி பொலிஸார் அறிக்கை

மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு