வகைப்படுத்தப்படாத

காதலியை பின்தொடர்ந்து கத்தியால் குத்த முற்பட்ட கடற்படை வீரர்

(UDHAYAM, COLOMBO) – காதலியை பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்த முயற்சித்த கடற்படை வீரர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில், இந்த வருடம் செம்டெம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளவிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலன் வேரு ஒரு பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபட்டிருந்தமை இறுதியில் தெரியவந்ததன் காரணமாக காதலி தனது காதலை கைவிட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் காதலியின் வீட்டுக்கு அந்த காதலன் சென்றுள்ள நிலையில், இந்த திருமணம் இடம்பெறாது என காதலி கூறியுள்ளார்.

பின்னர் அவர்களுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த காதலி பேருவளை காவற்துறையில் தனது உறவினருடன் முறைப்பாடு செய்ய சென்ற போது, காதலியை பின்தொடர்ந்த காதலன் அவரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி 23 வயதான தனது காதலியை கத்தியால் குத்த முயற்சித்த 27 வயதான காதலனை காவற்துறை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 11 அங்கு கத்தியொன்றையும் கைப்பற்றியுள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

தட்டம்மை நோயால் 1000க்கும் அதிகமானோர் பாதிப்பு

Rami Malek: Bond terrorist ‘not driven by religion’

Army Commander before PSC