நேற்றைய தினம் திருகோணமலையில் (03 )நபர்கள் காணமல் சென்ற நிலையில் திருமலை வைத்தியசாலை தரிப்பிடத்திலிருந்து முச்சக்கர வண்டி ஓட்டி வந்த சாரதி ஒருவர் கடந்த (26) திங்கட்கிழமை முதல் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு காணாமல் சென்ற நபர், ABM 7094 என்ற இலக்கப் பதக்கத்துடன் கூடிய முச்சக்கர வண்டியின் ஓட்டுனரான ஜெயக்குமார் என்பவராவார்.
காணாமல் போயிருந்த நிலையில், குறித்த நபர் இன்று நொச்சிகுளம் பகுதியில் மயக்கம் அடைந்த நிலையில், உடலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனுடன் தொடர்புடைய வகையில், அவரின் முச்சக்கர வண்டி முழுமையாக சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, கடத்தல் கும்பல் ஒன்று அவரை அழைத்துச் சென்று தாக்கியிருக்கலாம் என சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், இது ஒரு வாகன விபத்தாகவும் இருக்கலாம் என மற்றொரு தரப்பினரால் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
