வகைப்படுத்தப்படாத

காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்!

(UDHAYAM, COLOMBO) – ஏறாவூர் – வந்தாறுமூலை உப்போடைப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த கே. குமாரசாமி (வயது 40) என்ற விவசாயியே படுகாயமடைந்தவராகும்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இவர் உப்போடைப் பிரதேசத்திலுள்ள வயலில் இருந்து வந்தாறுமூலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது இடைவழியில் குறிக்கிட்ட காட்டு யானை இவரைத் தாக்கியுள்ளது.

அவ்விடத்தில் காயங்களோடு வீழ்ந்து கிடந்தவரைக் கண்டவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

லொட்டஸ் சுற்றுவட்டப் பாதை மூடல்

UNP Presidential candidate will be revealed in 2-weeks

பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் வருகை