உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி – வவுனியாவில் சோகம்

வவுனியா, கண்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (19) இரவு, அவரது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, வீதியோரத்தில் இருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில், கண்னாட்டி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தீபன்

Related posts

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு!

பட்டதாரிகளுக்கான அறிவித்தல்

கடந்த இரண்டு மாதங்களில் 8,422 smart phones திருடப்பட்டுள்ளது