உலகம்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 6 செய்தியாளர்கள் பலி

காஸா நகரில் இஸ்ரேல் இராணுவம் அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் நான்கு பத்திரிகையாளர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் அனைவரும் ஷிபா வைத்தியசாலையில் கூடியிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இத் தாக்குதலில் வைத்தியசாலை வளாகத்தின் அவசர பிரிவு கட்டடத்தின் நுழைவாயிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸா நகர வைத்தியசாலை அதிகாரிகளும் இந்த உயிரிழப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் பொறுப்பேற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

துப்பாக்கிச் சூடு – ஈரான் மறுப்பு

கொரோனா தொற்றால் பிரித்தானியாவில் இதுவரை 165,221 பேர் பாதிப்பு

ஆங் சான் சூகி : விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்