வகைப்படுத்தப்படாத

காசாவில் இருந்து இஸ்ரேல் மீது அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல்

காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வப்போது இஸ்ரேல் பகுதிக்குள் ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் இஸ்ரேல் படைகளும் அவர்களுக்கு எதிராக தொடந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், காசா எல்லையில் இருந்து போராளிகள் இஸ்ரேல் பகுதிக்குள் நேற்று மாலை முதல் ராக்கெட்டுகளை வீசி உக்கிரமான தாக்குதல் நடத்தினர். 300க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், இதையடுத்து இஸ்ரேல் சிறப்பு படைகள் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்ததில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து காசா எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

 

 

 

Related posts

100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

3,493 drunk drivers arrested within 12 days