உள்நாடு

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்த பயணிகள் கப்பலில் இந்திய நாட்டவர் ஒருவர் கொண்டு வந்த ஒரு தொகை குஷ் என்ற போதைப்பொருளை காங்கேசன்துறை துறைமுகத்தில் பணியாற்றும் சுங்க அதிகாரிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்.

33 வயதான இந்த இந்திய நாட்டவர் 4 கிலோ 12 கிராம் எடையுள்ள குஷ் போதைப்பொருளை தமது பயணப்பையில் சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணி கொண்டு வந்த பயணப்பை குறித்து அதிகாரிகள் சந்தேகம் அடைந்த நிலையில், ​​அதனை பரிசோதனை செய்த போது, போலியாக அடுக்குகளுக்குள் இந்த போதைப்பொருளை மறைத்து கொண்டு வந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 41.2 மில்லியன் ரூபாய் என்று சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் மற்றும் சந்தேக நபரை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சூழ்ச்சி வலையில் மைத்திரி

தீ விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை!

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்