உள்நாடு

காகித தட்டுப்பாடு : மின் பட்டியல்கள் எழுத்து மூலமாக வழங்கப்படும்

(UTV | கொழும்பு) – காகித தட்டுப்பாட்டினால் மின் பட்டியல்கள் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

மின் பாவனையாளர்களுக்கு மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு மின் வாசிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர், ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.

மின் பட்டியல்கள் தொடர்பில் ஏதேனும் சிக்கல் நிலவினால், இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தேடி அறிந்துகொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவிக்கையில்; விரும்பிய பாவனையாளர்களுக்கு இலத்திரனியல் மின் பட்டியல்களை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

மலையக சிறுமி அசானிக்கு வீடு அன்பளிப்பு!

ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து!

ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது