வகைப்படுத்தப்படாத

கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்தேன் – மஹிந்த

(UDHAYAM, COLOMBO) – கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்ததாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வளர்ச்சிக்கு இட்டுச்செல்ல தாம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம்கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷவினரும், பண்டாரநாயக்கவினரும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கியது, மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சியமைப்பதற்காக உதவ அல்லவென மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

ජලජීවී වගා පර්යේෂණ කේන්ද්රය විවෘත වෙයි.

Samuel L. Jackson joins the new “Saw”

தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்பு