உள்நாடு

களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது

(UTV|கொழும்பு)- களுத்துறை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

களுத்துறை பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த வர்னன் பெர்ணான்டோ மைதானத்தின் பூட்டை உடைத்து உட்புகுந்தமை தொடர்பாக அதன் முகாமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

Related posts

2025 ஆம் ஆண்டில் இதுவரை 1,996 துப்பாக்கிகள் மீட்பு

editor

ரணிலின் வெற்றி அவசியமாகும் – அமைச்சர் டக்ளஸ்

editor

இலங்கையில் அதிகரித்துள்ள நகரமயமாக்கல்!