உள்நாடு

களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவை வழமைக்கு

(UTV | கொழும்பு) – களனிவெளி புகையிரத பாதையின் கொஸ்கம முதல் அவிசாவளை வரையிலான ரயில் போக்குவரத்து இன்று (10) முதல் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வீதியில் உள்ள பாலம் ஒன்றின் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த 7ஆம் திகதி இரவு 8:30 மணி முதல் நேற்று (09) இரவு வரை குறித்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இதன்காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து கொஸ்கம வரை அந்த பாதையில் புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள 113 பேர் தனிமைப்படுத்தலுக்கு

முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

தனது பேராயர் காலத்தை நிறைவு செய்வாரா? குழப்பத்தில் கர்தினால்