அரசியல்உள்நாடு

கல்வி மற்றும் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த முன்னிட்பேன் – திருக்கோவில் தவிசாளர் சசிக்குமார்

திருக்கோவில் கல்வி வலயத்தில் தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 142 மாணவர்களையும் தனது பிறந்த நாளான ஒக்டோபர் 16ஆம் திகதி பாராட்டிக் கௌரவிக்கவுள்ளார் திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சசிக்குமார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…

எனது பிறந்த நாளான ஒக்டோபர் 16ஆம் திகதி நாளை ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் கல்வி வலயத்தில் தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 142 மாணவர்களையும் பாராட்டிக் கௌரவிக்கவுள்ளேன்.

அத்துடன் அந்த மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு அவர்களுக்கு வங்கிக் கணக்கினை திறந்து சேமிப்பு புத்தகம் என்பவற்றையும் வழங்கவுள்ளேன்.

தேர்தலுக்கு முன்னர் நாங்கள் மக்களுக்குத் தேவையான பல விடயங்களையும் சேவைகளையும் செய்தோம்.

அதன் காரணமாகத்தான் திருக்கோவில் பிரதேச மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர்.

அதனால் பிரதேச சபை ஆட்சி அதிகாரம் எமக்கு கிடைத்தது. தேர்தலின் போது மக்களுக்கு வாக்குறிதியளித்தபடி அவர்களின் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம்.

ஒரு தவிசாளர் என்ற அடிப்படையில் எனது அனைத்து கடமைகளையும் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறேன்.

பிரதேச சபைக்குரிய வருமானங்கள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்களை பெற்று எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் மிக பெரும் அபிவிருத்திப் பணிகளை திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ளோம். அந்த வகையில் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

கல்வி, விளையாட்டு மற்றும் தொழில்துறை என்பவற்றில் எனது பிரதேச மக்கள் நலனில் எனது பங்களிப்பு என்றும் இருக்கும்.

குறிப்பாக எனது சொந்த நிதியில் இந்த வருடம் தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை பெற்று அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளேன்.

எதிர்காலத்தில் கா.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் எழுதவுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்ற விடயங்களை செய்து இந்த பிரதேச மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களையும் வகுத்துள்ளேன்.

எதிர்காலத்தில் பிரதேச சபை நிதியொதுக்கீட்டின் மூலம் உதைப்பந்து மற்றும் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை நடாத்தி இங்குள்ள விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படுவர். இப்போது இங்குள்ள சகல விளையாட்டு கழகங்களையும் தனிப்பட சந்தித்து கலந்துரையாடி வருகின்றேன்.

எதிர்காலத்தில் அவர்களுக்கு நிதியுதவிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு உரிய பயிற்சிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

Related posts

ஒட்டோமொபைல், இலத்திரனியல் இறக்குமதியாளர்களுடன் வரவு செலவுத் திட்டத்திற்கு பூர்வாங்கக் கலந்துரையாடல்

editor

மேலும் 61 பேர் பூரண குணம்

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி