சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு

(UTV|COLOMBO) பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் எதிர்வரும் மாதம் 08ம் திகதி அழைக்கப்பட்டுள்ளார்.

இவரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதுதவிர எதிர்வரும் 01ம் திகதி 09.30 மணிக்கு ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை ஆராய குழு நியமனம்…

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு

ஆளுங் கட்சியினர் இன்று பாராளுமன்றத்தினை வெளிநடப்பு செய்யத் தீர்மானம்