மட்டக்கிளப்பு மாவட்டத்தின் தாளம்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதியில், பெண்களின் ஆடைகள் தொடர்ச்சியாக திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொதுமக்களால் கைவசமாக பிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்கள் விடுதியில், ஆடைகளை உலர்த்துவதற்காக வெளியில் வைக்கப்பட்டிருந்த பெண்களின் ஆடைகள், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக காணாமல் போய்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் விடுதியில் வசித்து வந்த பெண்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் இந்த சம்பவம் தொடர்பில் அதிக அவதானத்துடன் கண்காணிப்புகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அந்த கண்காணிப்பின் போது, ஒரு நபர் பெண்களின் ஆடைகளைத் திருடி வருவது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், முன்னர் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, கல்லூரி ஆண் மாணவர்கள் இணைந்து அந்தப் பகுதியில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த திருடன் பெண்கள் விடுதிக்குள் தடுப்பு சுவரைத் தாண்டி ஆடைகளைத் திருட முயன்றபோது, கல்லூரி ஆண் மாணவர்களால் சுற்றி வளைக்கப்பட்டு கைவசமாக பிடிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பிடிபட்ட அந்த நபர் தாளம்குடா பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
