கல்முனை,மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்கள் கடலரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை(15) சென்று பார்வையிட்டார்.
அதன்போது மாளிகைக்காடு மையவாடி அமைந்திருந்த பிரதேசம் கடல் அரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதையும் அவதானித்ததுடன் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் உரையாடியதோடு அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்தார்.
இதன் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் உட்பட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் பொருளாளர் முன்னாள் கல்முனை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்
