உள்நாடு

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு

(UTV | கொழும்பு) –  கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் அலறி ரிபாஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

கடந்த 07ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஓட்டமாவடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வின் போது, கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் சட்டத்தரணி அலறி ரிபாஸ் மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.

கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி அமீர் அலியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று 36 மணிநேர நீர்வெட்டு

ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு