மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகு ஒன்றில் குறித்த இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
எனினும் அவர்கள் இருவரும் வீடு திரும்பாமை காரணமாக நேற்று வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன மீனவர்கள் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.