உள்நாடுபிராந்தியம்

கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை

கல்பிட்டி ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி மாணவர் முஹம்மது மஹ்ரூப் முஹம்மது அக்ஸான், அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற குர்ஆன் மனன போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

“ஜம்இய்யதுல் குர்ராஃ” ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் 100 க்கும் மேற்பட்ட மத்ரஸாக்களிலிருந்து சுமார் 500 மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியிலேயே இவர் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டிகள் அண்மையில் கொழும்பு 02 பிஷொப் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நடுவர்களாக கலந்து கொண்டவர்கள் சர்வதேச நடுவர் சங்கத்திலிருந்து வருகை தந்த கட்டார் மற்றும் சவூதி அரேபியா நாடுகளை சேர்ந்த நடுவர்களாகும்.

குறித்த இந்த மாணவர் கல்பிட்டி பூலாச்சேனை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-எம்.யூ.எம்.சனூன்

Related posts

ரேஷன் முறையில் எரிபொருளை வழங்க யோசனை

பத்தரமுல்லை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

நாடு திரும்பும் மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள்