உள்நாடு

கல்கிசையில் இளைஞன் சுட்டுக்கொலை – இருவர் கைது

கொழும்பு – கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (12) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 மற்றும் 32 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கல்கிஸ்ஸை, சில்வெஸ்டர் வீதிக்கு அருகில் கடந்த மே மாதம் 05 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றுக்கு முன்னால் இருந்த இளைஞன் ஒருவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ளனர்.

இதன்போது அந்த இளைஞன் அங்கிருந்து தப்பிச் சென்று நீ்ண்ட தூரம் ஓடியுள்ளார்.

ஆனால் துப்பாக்கிதாரிகள் இளைஞனை துரத்திச் சென்று நடுவீதியில் வைத்து சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

தெஹிவளை, ஓபன் பிளேஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவு

91 ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை கடவுச்சீட்டு

editor