உலகம்

கலிபோர்னியா காட்டுத் தீ – அவசரகாலநிலை பிரகடனம்

(UTV|அமெரிக்கா)- அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயிணை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில், விமானி உயிரிழந்துள்ளார்.

இந்த தீ பரவலினால் ஆயிரக் கணக்கான நிலப் பகுதி தீக்கிரையாகியுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

கலிபோர்னியாவில் 72 மணி நேரத்தில் சுமார் 11,000 மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளதனால் 367 தீப் பிடிப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உலகிலேயே மிக அதிகமான வெப்பநிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய அதேவேளை கடுமையான காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படுள்ளது.
இதன் காரணமாக ஏராளமான காட்டுத்தீ ஏற்படலாம் என வானிலை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லிபோர்னியா மாநிலம் முழுவதும் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

கட்டடமொன்றில் மோதி விமானம் விபத்து – கலிபோர்னியாவில் சம்பவம்

editor

அமெரிக்க பசுபிக் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை அபாயம்

editor

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்