உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் மீட்பு

புத்தளம் – கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் இருந்து பெருந்தொகையான போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து, உடன் செயற்பட்ட கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸார் குறித்த பகுதியில் நேற்று (26) இரவு விஷேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 4 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 3 இலட்சத்து 17 ஆயிரம் போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட குறித்த போதை மாத்திரைகள், கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்கள் கடற்பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

editor

ஹரீன், மனுஷ மீண்டும் UNPக்குள்….!