உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

புத்தளம் – கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேதவாட்டிய கடற்கரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) காலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடை நீடிப்பு

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா!

‘குடு திலான்’ என்பவருக்கு மரண தண்டனை விதிப்பு