உள்நாடு

கரையோர ரயில் சேவையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – கரையோர ரயில் மார்க்கத்தின் பாணந்துறை வரையில் ஒரு வழி தடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் இருந்து பம்பலப்பிட்டி வரையான ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகளுக்காக இந்த ஒரு வழி தடம் மூடப்பட்டிருக்கும் என ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக இன்றும், நாளை மற்றும் நாளை மறுதினம் அந்த பகுதிக்கான பல ரயில் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரையில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

 ஆற்றில் தவறி விழுந்தவர் மாயம்

வடக்கு-கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை : மகாநாயக்கர்களிடம் எடுத்துரைப்பு