சூடான செய்திகள் 1

கராபிட்டியவில் புற்றுநோய் நிவாரண மையம்

(UTVNEWS | COLOMBO) – கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் நிவாரண மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது.

புற்றுநோய் சங்கம் மற்றும் பரோபகாரர்கள் நிதிபங்களிப்புடன் குறித்த நிவாரண மையம் கடற்படையினரால் நிர்மாணிக்கப்படுகின்றது.

அதன்படி, சுப நேரத்தில் மத சடங்குகளுடன் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்காக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபதிரன, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல், வைத்தியசாலைகளின் இயக்குனர் டொக்டர் ஜி. விஜேசூரிய, அரசு அதிகாரிகள், புற்றுநோய் சங்க உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

காலி கிரிக்கட் விளையாட்டரங்கு அகற்றப்படமாட்டாது

இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு