உள்நாடு

கம்பஹாவிற்கு 6 மணி நேர நீர்வெட்டு

(UTV |  கம்பஹா) – சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக நாளை(23) காலை 9 மணி முதல் 6 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பேலியகொட, வத்தள, ஜாஎல, கட்டுநாயக்க/சீதுவ ஆகிய நகர சபை பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களனி, வத்தள, பியகம, மஹர, ஜாஎல பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் எழுமாறாக PCR பரிசோதனை