கண்டி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கி வைக்கும் திட்டத்தில், கம்பளை- மாரியாவத்த பெரிய பள்ளிவாயலுக்கு நிவாரண உதவிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் நேற்று (17) வழங்கி வைத்தார்.
இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹீர், தாஹீர் மரைக்கார், கண்டி மாவட்ட கட்சியின் அமைப்பாளர் அம்ஜத் ஹாஜியார், குருணாகல் மாநகர பிரதி நகர பிதா அஸார்டீன் மெய்னுடீன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பயாஸ், அஸ்மி, றாபி உள்ளிட்டோருடன் ரமலான், இர்ஷாட் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் இதன் போது கலந்துகொண்டனர்.
-ஊடகப் பிரிவு
