உள்நாடுபிராந்தியம்

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொலை – இருவர் கைது

கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, கந்தானை ரூபமுல்ல சந்தி மற்றும் கந்தானை நகரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 03ஆம் திகதி கந்தானை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் றாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக கந்தானை பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பல மாதங்களாக நீடித்த லாஃப் சமையல் எரிவாயு தட்டுப்பாடு வழமைக்கு

editor

ரவி உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணைக்கு

புதிதாக 261 கொரோனா நோயாளிகள் [UPDATE]