உள்நாடு

கந்தகாடு : மற்றொரு ஆலோசகருக்கு கோரோனா; 70 சிறுவர்கள் தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மற்றொரு ஆலோசகருக்கும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மகியங்கனை, ராஜாங்கனையே சேர்ந்தவருக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் குறித்த அவரது பிள்ளைகளுடன் கல்வி பயின்ற 70 பிள்ளைகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடன்

கொரோனா : 8,000ஐ கடந்தது

யாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை