கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளும் நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
