உள்நாடுபிராந்தியம்

கண்டியில் 50,719 பேர் பாதிப்பு – 131 பேர் பலி – 174க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை – 532 வீடுகள் முழுமையாக சேதம்

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கண்டி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்புக்களை சந்தித்துள்ளது.

50, 719 நபர்களின் 532 வீடுகள் முற்றாகவும், 4,451 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அறிக்கையின் படி கடந்த முதலாம் திகதி மாலை வரை பதிவான தபவல்களின் அடிப்படையில் குறைந்தது 131 பேர் மரணித்தும் 174 ற்கு மேற்பட்டவர்கள் காணாமலும் போயுள்ளனர்.

சில இடங்களில் தேடுதல் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக அக்குறணைப் பிரதேச சபைப் பிரிவிலுள்ள அளவத்துகொடை ரம்புக்கே -எல என்ற கிராமத்தின் பெரும்பகுதி முற்றாக புதைந்துள்ளது.

இதில் சுமார் 40 ற்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்டுகிறது. இவ்விடத்தில் தேடும் பணிகள் தற்போது கைவிடப்பட்டுள்ளன.

மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டடருக்கும் மேற்பட்ட தூரம் வரை மண் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அதே நேரம் கண்டி மாவட்ட இடர் முகாமைத்து மத்திய நிலையத்தின் அறிக்கையின் படி 21,927 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 50,719 நபர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன்

இடைத்தங்கள் முகாம்களில் 8,864 குடும்பங்களைச் சேர்ந்த 33,474 பேர் தங்கி உள்ளதாகவும் தெரவிக்கப்படுகிறது.

இதற்காக கண்டி மாவட்டத்தில் 349 இடைத்தங்கள் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி மாவட்டத்தில் மொத்தம் 532 வீடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4,451 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

அக்குறணை, கம்பளை, கெலிஓயா, பேராதனை போன்ற மகாவலி கங்கையை அண்மித்த நகரங்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளன.

கெலிஓயாவின் உட்புறமாக அமைந்துள்ள மகாவலிகங்கையை அடுத்துள்ள கலுகமுவ கிராமம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சில இடங்களுக்கு இன்னும் மின்சாரம், நீர் வினயோகம் என்பன சீராக வில்லை.

இதன் காரணமாக வௌ்ளம் வடிந்த இடங்களில் உள்ள வீடுகளை சுத்தம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. ஒரு சில பகுதிகள் மட்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

Related posts

யாழ் செம்மணி வளைவுக்கு அண்மையில் கோர விபத்து!

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்!

ரஞ்சனை பாராளுமன்றுக்கு அழைக்க முடியாது