உள்நாடு

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் துப்பாக்கி ரவைகளுடன் பிரவேசிக்க முயற்சித்தவர் கைது..!

(UTV | கொழும்பு) – கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவரின் பயணப் பொதியில் 6 வெற்று தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகையின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேகாலையைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் அனுமதிப்பத்திரம் கொண்ட துப்பாக்கி இருப்பது விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும்

அனுராதபுரம் வைத்தியசாலையில் போராட்டம் தொடர்கிறது

editor