உள்நாடு

கண்டி எசல பெரஹரா திருவிழா இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வருடாந்த எசல பெரஹரா திருவிழாவின் இறுதிப் பிரமாண்ட ரந்தோலி பெரஹரா நேற்று (11) இரவு இடம்பெற்றது.

அதன்படி இன்று (12) காலை கட்டம்பே துறைமுகத்தில் நீர் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பிற்பகல் கண்டி நகரில் வீதி உலாவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர், கண்டி ஜனாதிபதி மாளிகையில், தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், பெரஹரா விழா உத்தியோகபூர்வமாக நிறைவு பெற்றதைக் குறிக்கும் மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளார்.

Related posts

வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்கள் – ஆசிரியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை

மிலேனியம் சவால் கைச்சாத்திடுவதில்லை

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம்