உள்நாடுபிராந்தியம்

கணவன் மரணம் – மனைவி கைது – ஓட்டமாவடி, மாஞ்சோலையில் சம்பவம்!

73 வயதுடைய கணவன் மரணமடைந்த சம்பவத்தில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த 73 வயதுடைய வயோதிபர் ஒருவர் அடி காயங்களுடன் கடந்த 29 ஆம் திகதி இரவு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறு சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (4) மரணமடைந்துள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட அவரது மனைவி ஊன்றுகோலால் தாக்கியதில் வயோதிபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

புத்தாண்டில் 14 பேர் பலி : 74 பேர் காயம்

தனது இல்லத்தில் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்ற – ஆசிரியர் கைது!