உள்நாடுபிராந்தியம்

கணவனும், மனைவியும் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், செவ்வாய்க்கிழமை (1) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பன்சால வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர்களை அதிரடிப்படையினரும் வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விடுமுறை

உலக தொழுநோய் தினம் இன்று!

எகிப்து தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

editor