உள்நாடு

கட்டுப்பாட்டை இழந்த கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – பலர் காயம்

பாணந்துறை, பல்லிமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

நுகர்வோருக்கு நிவாரணம் – ஜனாதிபதி பணிப்பு

13ஐ நடைமுறைப்படுத்துவதே இலங்கையின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் – டக்ளஸ்

editor

ரணில் பிரதமர் பதவியினை கோரவில்லை – UNP