உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்னியக்க கடவுச்சீட்டு சோதனை அமைப்பு திறப்பு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு E-Gate முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், விமான நிலையத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு முறைமையை வலுப்படுத்துவதையும், டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி நடைபெற்றது.

இந்தத் திட்டம் ஜப்பானிய அரசாங்கத்தின் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமடா (Akio Isomata) மற்றும் IOM அமைப்பின் இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் கிரிஸ்டின் பார்கோ (Kristin Parco) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் நிலையான அபிவிருத்திக்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என ஜப்பானிய தூதுவர் இதன்போது உறுதியளித்தார்.

இந்த E-Gate முறைமையானது தெற்காசிய பிராந்தியத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு வசதிகளை நவீனப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Related posts

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு இந்தோனேசியாவின் உதவி – தூதுவர் உறுதி

editor

தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அவசியம்

editor